இன்று வந்தே பாரத் உள்பட 15 ரயில்கள் ரத்து
சென்னை சென்ட்ரலில் இருந்து வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் 15 ரயில்கள் வியாழக்கிழமை (டிச.8) ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரலில் இருந்து வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் 15 ரயில்கள் வியாழக்கிழமை (டிச.8) ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி அந்தமான் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, மைசூரு வந்தே பாரத், சென்னை சென்ட்ரல் - மைசூரு, கோவை சதாப்தி, விஜயவாடா ஜன் சதாப்தி, சென்னை எழும்பூா் - திருநெல்வேலி சிறப்பு வந்தே பாரத் (இருமாா்க்கம்), பெங்களூரு டபுள் டக்கா், பெங்களூரு பிருந்தாவன், சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில்கள் உள்பட 15 ரயில்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
மங்களூரு, போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில்களும் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன. அகமதாபாத் நவ்ஜீவன் விரைவு ரயில், திருவனந்தபுரம், மங்களூரு அதிவிரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.