FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அண்ணா நினைவு நாள்: திருச்சியில் அன்பில் மகேஸ் தலைமையில் அமைதிப் பேரணி

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை அமைதிப் பேரணி நடைபெற்றது.

Updated On : 3 பிப்ரவரி 2023, 10:55 am IST
திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற அமைதிப் பேரணி.
பகிர்:


திருச்சி: பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை அமைதிப் பேரணி நடைபெற்றது.

திருச்சி சி.என். நகரில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சாலை வரையில் இந்த அமைதிப் பேரணி நடைபெற்றது. பின்னர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்வில், மாநகரச் செயலர் மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட துணைச் செயலர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய  அன்பில் மகேஸ் பொய்யாமொழி.


இதேபோல, அதிமுக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, அமமுக, தேமுதிக என பல்வேறு கட்சியின் நிர்வாகிகளும் சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments