குடியரசுத் தலைவர் வருகை: மதுரையில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை
குடியரசுத் தலைவர் வருகை திரௌபதி முர்மு வருகையையொட்டி, மதுரையில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் வருகை திரௌபதி முர்மு வருகையையொட்டி, மதுரையில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிப்ரவரி 18-ஆம் தேதி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக தமிழகம் வருகிறார். பிப்ரவரி 18-ம் தேதி தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 11.50 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் முர்மு, மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர், ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 19-ம் தேதி கோவையிலிருந்து மீண்டும் புறப்பட்டு முர்மு தில்லி செல்கிறார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: முரசு கொட்டி வாக்குச் சேகரித்த விஜயபிரபாகரன்!
இந்த நிலையில், மதுரையில் பிப்.18, 19-ல் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.