FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

Updated On : 15 பிப்ரவரி 2023, 1:12 pm IST
பகிர்:

சேலம்: சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்துத் துறை அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும் நாளையும் (புதன்கிழமை, வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொள்கிறார். இதையொட்டி, சென்னையில் இருந்து சேலத்திற்கு தனி விமானம் மூலம் முதல்வர் வந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த முதல்வருக்கு தமிழக காவல்துறைத் தலைவர் சி. சைலேந்திரபாபு, சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

சேலம் செல்லும் வழியில் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன் அறிவிப்பின்றி சென்ற முதல்வர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். வருவாய்த்துறை மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். வருகைப் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட்ட முதல்வர் ஓமலூர் வட்டத்தில் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் பற்றியும் கேட்டறிந்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

இதைத்தொடர்ந்து தொடர்ந்து சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

இரட்டை அடுக்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்ட முதல்வர், பணிகள் குறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் தா. கிறிஸ்துராஜிடம் கேட்டறிந்தார். 

இதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு, சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் முனைவோர், விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மாணவ-மாணவயரிடமும் கலந்துரையாடினார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முதல்வரின் தனி செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
 
மாலை நடைபெறும் நிகழ்வில் சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments