FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Updated On : 19 ஜனவரி 2023, 3:50 pm IST
பகிர்:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவு காரணமாக, ஜனவரி 4ஆம் தேதி காலமானார்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் மீண்டும் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் போட்டியிடும். இன்று மாலை கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளேன். அனைத்து கூட்டணி கட்சிகளும் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மேலும், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என்று அதிமுக - தமாகா தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments