முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.43,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:01 PM
கோப்புப்படம்
பகிர்:


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.43,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை காலை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிரடியாக ஒரு சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ரூ.43,960-க்கும், ஒரு கிராம் ரூ.33 அதிகரித்து, ரூ5,495-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம், வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.1 உயர்ந்து ரூ.76.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்து ரூ.76,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.