நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம்
எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்க இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட பின் ஓரிரு நாள்களில் மீனவர்களை இந்தியா அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 12 ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
அவர்களை மார்ச் 17 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மீனவர்கள் அனைவரும் மீண்டும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள விசைப்படகு விடுவிக்கப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.