தமிழ்நாடு

சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 

DIN

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

வேளச்சேரி மற்றும் பரங்கிமலையை இணைக்கும் வகையில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று  (வியாழக்கிழமை) மாலை இரு தூண்களுக்கு இடையே உள்ள பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

பாலம் இடிந்து விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆதம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

”யாருக்காக உச்சத்தை விட்டுட்டு வந்தீங்க?” விஜய்யை தாக்கிப் பேசிய EPS!

SCROLL FOR NEXT