FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோவையில் யானை தாக்கியதில் இளைஞர் பலி

கோவை அடுத்த விராலியூர் பகுதியில் யானையை விரட்டிச் சென்ற இளைஞரை யானை திருப்பித் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Updated On : 29 ஜூலை 2024, 11:25 am IST
யானை தாக்கியதில் பலியான கார்த்தி.
பகிர்:

கோவை அடுத்த விராலியூர் பகுதியில் யானையை விரட்டிச் சென்ற இளைஞரை யானை திருப்பித் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்தது. உடனடியாக பூலாம்பட்டி வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத் துறையினர் மற்றும் பொதுமக்கள் காட்டு யானையை வனப் பகுதிக்கு விரட்டினர். பின்னர் மீண்டும் இரவு பத்து மணியளவில் வந்த ஒற்றைக் காட்டு யானை ஆக்ரோஷமாக அங்கு, இங்கும் சுற்றி திரிந்ததால் யாரும் காட்டு யானை அருகே செல்ல வேண்டாம் என்று வனத் துறையினர் கூறினர்.

இருந்த போதிலும் யானையை விரட்ட முற்பட்ட விராலியூர் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்தி வயது 24 பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய நண்பர் ஹரிஷ் வயது 22 தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இருவரும் குடியிருப்பு பகுதிக்குள் வந்த ஒற்றைக் காட்டு யானையை விரட்ட பின்னாடியே ஓடிச் சென்று உள்ளனர். ஆக்ரோஷத்தில் இருந்த காட்டு யானை இவர்களைப் பார்த்து திரும்பி தாக்கத் தொடங்கியது. அதில் ஹரிஷ் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார்.

Advertisement

Advertisement

பின்னர் யானை துரத்தியதில் தடுமாறி கீழே விழுந்த கார்த்தியை யானை தூக்கி வீசி மிதித்து சென்றதில் சம்பவ இடத்திலேயே பலியானார். காட்டு யானை துரத்தியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த ஹரிஷை அங்குள்ள டாட்டா ஏ.சி வாகனத்தின் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். காட்டு யானையை விரட்ட வேண்டாம் என்று வனத் துறையினர் பலமுறை எச்சரிக்கை கொடுத்தும் கேட்காமல் யானையை விரட்டச் சென்ற இளைஞர், யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலியான நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments