தவெக தலைவர் விஜய்  
தமிழ்நாடு

கல்வி விருது: 2-ம் கட்டமாக மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விஜய்!

பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் பரிசளித்து வருகிறார்.

DIN

பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக விருது வழங்கிப் பாராட்டி வருகிறார்.

முதல்கட்டமாக கடந்த மே 30-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள மாவட்டங்களின் 84 தொகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள், ஊக்கத்தொகையும் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள தவெக தலைவர் விஜய், மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி ஆவணங்கள் மூலம் வீட்டுமனை விற்பனை: 3 போ் கைது

எழும்பூா் ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

இருசக்கர வாகனம் எரிப்பு: இருவா் கைது

சீன ஓபன்: இறுதிச் சுற்றில் அனிஸிமோவா-லிண்டா

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: ஜெகதிஸ்ரீ முதலிடம்

SCROLL FOR NEXT