FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை ?

கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஒருசில பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

16 June 2025, 8:22 am IST
கோப்புப்படம்.
பகிர்:

கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஒருசில பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

அமெரிக்காவில் யாரும் மன்னர் இல்லை..! அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 16) மிக பலத்த மழை (120 மி.மீ. - 200 மி.மீ) பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கையும், கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு (70 மி.மீ. - 110 மி.மீ.) வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 16) விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments