FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இலங்கை கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சீமான் அறிவிப்பு!

தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Updated On : 18 மார்ச் 2025, 9:38 pm IST
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை சார்பாக வருகிற சனிக்கிழமையில் (மார்ச் 23), ராமேஸ்வரம் - தங்கச்சிமடம், வலசை பேருந்து நிறுத்தம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து திங்கள்கிழமை 403 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது கென்னடி என்பவரது படகை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

Advertisement

Advertisement

மேலும், படகில் இருந்த மீனவர்கள் சங்கர், அர்ச்சுணன், முருகேசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments