ஆளுநர் மூலமாக புதுவையை ஆளும் பாஜக! மாநில அந்தஸ்து வழங்க மறுப்பு! உதயநிதி பேச்சு
புதுவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்...
புதுவையில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் பிரசாரம் மேற்கொண்டார்.
அவர் பேசியதாவது,
"புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க பாஜகவாலும் பிரதமர் மோடியாலும் முடியும், ஆனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கினால் ஆளுநரை வைத்து இவர்களால் எதுவும் செய்ய முடியாது. அதனால்தான் புதுவைக்கு இன்னும் மாநில அந்தஸ்து வழங்க பாஜக மறுக்கிறது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் அதிமுக தோலில் பாஜக எப்படி சவாரி செய்கிறதோ, அதேபோல புதுவையில் ரங்கசாமி தோலில் ஏறி பாஜக சவாரி செய்கிறது.
தமிழகத்தை தனது கன்ட்ரோலில் இருக்கும் எடப்பாடி மூலம் எப்படி முயற்சி செய்கிறதோ, அதேபோல புதுவையிலும் பாஜக முயற்சி செய்கிறது. இவற்றை எல்லாம் தவிர்க்க திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். வெறுப்பு அரசியலுக்கு இடம் கொடுக்கக் கூடாது. புதுச்சேரியில் மக்களின் அனைத்து விஷயங்களிலும் ஆளுநர் தலையீடு இருக்கிறது. ஆளுநர் மூலமாக புதுவையை தில்லியில் இருந்து ஆள நினைக்கின்றனர்.
புதுவையில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைத்து 10,000 பேருக்கு வேலை வழங்கப்படும்.
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2, 000 வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20 லட்சம் மருத்துவக் காப்பீடு.
முதியவர்களுக்கு வீடுகளுக்கே ரேஷன் பொருள்கள் வந்து கொடுக்கப்படும்.
புதிய தொழிற்சாலைகள், ஜவுளிப்பூங்கா ஏற்படுத்தப்படும்.
மகளிருக்கு கட்டணமில்லா விடியல் இலவச பயணம் திட்டம் அமல்படுத்தப்படும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய மேம்பாலங்கள்
மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
பாஜகவின் புதிய கல்வி கொள்கையை புதுவையில் அமல்படுத்திவிட்டார்கள். அது மாற்றப்பட்டு தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டம் இங்கு அமல்படுத்தப்படும்" என்று பேசினார்.
BJP intend to rule Puducherry from Delhi through the Governor: Udhayanidhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.