வாக்குப் பதிவு உயரும்; 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம் : கனிமொழி
திமுக கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என கனிமொழி நம்பிக்கை...
தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு உயரும் என நம்புகிறேன் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுடன் கனிமொழி பேசியதாவது:
''மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள். நான் எண்களுக்குள் போக விரும்பவில்லை. சிறப்பான வெற்றியை திமுக கூட்டணி பெறும். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்.
வாக்குகளை எண்ணிய பிறகு உண்மையை அனைவரும் தெரிந்துகொள்வார்கள். அதிகமாக மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். உங்கள் எதிர்காலத்திற்கு நல்ல ஆட்சியாக இருக்கும் என்பதை சிந்தித்து வாக்களியுங்கள். முதல் தலைமுறை வாக்காளர்கள் எதிர்காலத்தை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
TN Election 2026 DMK MP Kanimozhi has stated that she believes voter turnout will increase in Tamil Nadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.