FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பட்ஜெட் 2026! பள்ளிகளில் இனி 2 நாள்கள் இல்லை; நாள்தோறும் பி.டி. வகுப்பு!

பட்ஜெட் 2026-ல், பள்ளிகளில் இனி 2 நாள்கள் இல்லை நாள்தோறும் பி.டி. வகுப்புகள் கொண்டுவரப்படுகின்றன.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 10:59 am IST
விளையாட்டு வகுப்பு - Center-Center-Chennai
பகிர்:

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இனி நாள்தோறும் ஒரு மணி நேரம் விளையாட்டு பயிற்சி வகுப்புகள் செயல்படுத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் என்.மரிய வில்சன் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

நிதியமைச்சர் மரிய வில்சன் விளையாட்டுத் துறை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், ஒருங்கிணைந்த இளைஞர் மேம்பாட்டுத் திட்டம் கொண்டு வரப்படுகிறது.

Advertisement

Advertisement

இதன்படி, மருத்துவம், காவல், சேவைத்துறையுடன் ஒருங்கிணைத்து மாணவர்களை ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபடுத்தும் திட்டம் கொண்டு வரப்படும்.

மாநிலம் முழுவதும் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.

பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உலகம் தரம் வாய்ந்த பயிற்சி வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.

ஏற்கனவே விளையாட்டுத் துறையில் செயல்பட்டு வரும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க ரூ.22 கோடி ஒதுக்கீடு.

விளையாட்டு என்பது பள்ளிப் பருவத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும்.

இப்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்துக்கு இரண்டு விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் மட்டுமே உள்ளன.

இது மாற்றப்பட்டு பள்ளி நேரத்துக்குப் பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப் விளையாட்டு நேரம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

இந்த திட்டத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என்று அறிவித்துள்ளார்.

summary

Budget 2026! No more just two days a week in schools; daily PT classes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments