FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சட்டப்பேரவைக்கு வந்தார் முதல்வர் விஜய்! வாழ்த்து பெற்ற மரியவில்சன்!

சட்டப்பேரவைக்கு முதல்வர் விஜய் வருகை தந்துள்ளது பற்றி...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 9:53 am IST
முதல்வர் விஜய்யுடன் மரியவில்சன் - கோப்புப் படம்
பகிர்:

பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பதால் சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் விஜய்யிடம் நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, இன்று முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது. 2026- 27 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதையொட்டி சட்டப்பேரவைக்கு முதல்வர் விஜய் வருகை தந்துள்ளார். அதற்கு முன்னதாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவைக்கு வந்தார்.

Advertisement

Advertisement

பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பதால் அமைச்சர் மரியவில்சன், முதல்வர் விஜய்யிடம் பட்ஜெட் நகலைக் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

நேற்று கைது செய்து விடுவிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.

summary

CM vijay in tn assembly, minister marie wilson get blessings from CM vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments