அனைவரும் பாராட்டக்கூடிய நிதிநிலை அறிக்கை: அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அமைச்சர்கள் மரியவில்சன், வினோத் ஆகியோருக்கு முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்தது குறித்து...
அனைவரும் பாராட்டக்கூடிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ததாக அமைச்சர்கள் மரியவில்சன் மற்றும் வினோத்துக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ.மரிய வில்சன் அவர்களுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
TN Budget: Chief Minister Vijay congratulates the ministers Marie Vilson and Vinodh
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.