"தமிழ்நாடு' வெறும் வார்த்தையல்ல; தமிழர்களின் வரலாறு: வைகோ புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேச்சு
"தமிழ்நாடு' என்பது வெறும் வார்த்தை அல்ல, அதற்குள் தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாறு அடங்கியுள்ளது என்றார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
"தமிழ்நாடு' என்பது வெறும் வார்த்தை அல்ல, அதற்குள் தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாறு அடங்கியுள்ளது என்றார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
மதிமுக பொதுச் செயலர் வைகோ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா தில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு நூலை வெளியிட அதன் முதல் பிரதியை உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது: 82 வயதானாலும் வைகோ இன்னமும் ஒரு மாணவர் போலவே தன்னைக் கருதிக் கொள்கிறார். காரணம், தனது வாழ்க்கையிலும், அரசியலிலும் இப்போதும் அவர் மாணவராகவே வாழ்ந்து அடிப்படை கேள்விகளை எழுப்புகிறார்.
Advertisement
Advertisement
"பாரதம்' என்பது மாநிலங்களின் ஒன்றியமாகும். மாநில மக்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடுதான் பாரதம். அதுபோல, "தமிழ்நாடு' என்று அழைக்கும்போது அது வெறும் வார்த்தை மட்டுமல்ல.
அந்த வார்த்தைகளுக்குள் தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாறும் தமிழ் மக்களின் மொழிப் பற்றும் அடங்கியுள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.