மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி! - பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட்டில் மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி குறித்த அறிவிப்பு பற்றி...
மதுரையில் சிறப்பு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, 2026- 27 ஆம் நிதியாண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் மரியவில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு 8,393 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அப்போது உயர்கல்வித் துறைக்கான அறிவிப்பில் மதுரையில் புதிய சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
"மதுரையில் சீர்மிகு சட்டப்பள்ளி தரத்தில் மேம்பட்ட சட்டக் கல்வி வழங்க, 300 மாணவர்களின் சேர்க்கையுடன் புதிய சட்டக் கல்லூரி தொடங்கப்படும்" என்றார்.
மேலும், "வெற்றி மடிக்கணினி திட்டத்துக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கீடு.
போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ. 3 கோடி கூடுதல் நிதி
ஒரு லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
மாணவர்கள் தங்கும் விடுதிக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு
நீட் தேர்வு முறையினை உடனடியாக ரத்து செய்து பொதுத்தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கையைத் தொடர்ந்திட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது" என்றார்.
TamilNadu Budget 2026: Special Government Law College in Madurai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.