பொள்ளாச்சி அருகே நண்பனைக் கொன்று செல்ஃபி எடுத்த ஜென் ஸீ-க்கள்!
பொள்ளாச்சி அருகே நண்பனைக் கொன்று செல்ஃபி எடுத்த இளைஞர்கள் பற்றி...
பொள்ளாச்சி அருகே நண்பனை மதுபோதையில் அடித்துக் கொன்ற இளைஞர்கள், சடலத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே சிக்கலாம் பாளையம், உதயம் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. கட்டடத் தொழிலாளியான இவரது மகன் அஸ்வின் (வயது 22). இவர் புதன்கிழமை இரவு, அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் செல்வக்குமார் என்பவரின் மகன்களான தினேஷ் (16), மாதேஷ் (22) ஆகியோருடன், விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டுக்குச் சென்று மது அருந்தியுள்ளனர்.
அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் தம்பிகளான, தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து, அதிகாலை 1.45 மணிக்கு, அஸ்வினை சுத்தியால் தலையில் அடித்தும், கத்தியால் கழுத்து அறுத்தும் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தனிப்படை அமைத்து, தலைமறைவான குற்றவாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.
மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபரை, சுத்தியால் அடித்து, கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ள சம்பவம், கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gen Z youths kill their own friend and take a selfie near Pollachi!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.