குறைந்த நீரில் அதிக மகசூல்! துளித் துளித் தண்ணீர் திட்டம்! பட்ஜெட்டில் அறிவிப்பு
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்...
தமிழக வேளாண் பட்ஜெட்டில் நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டத்துக்கு ரூ. 785 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
Advertisement
Advertisement
தான்நல்காது ஆகி விடின்" (திருக்குறள் 17)
மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும் மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும் என்பது திருவள்ளுவரின் வாக்கு.
இதன் அடிப்படையில், நீரினைச் சிக்கனமாகப் வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து. பயன்படுத்த தமிழ்நாட்டில் நீர் மேலாண்மையை மேம்படுத்தி, இருக்கும் நீர் ஆதாரங்களைத் திறம்படப் பயன்படுத்தி, பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் மத்திய , மாநில நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
அரசின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026-27 ஆம் ஆண்டில், 2 இலட்சத்து 22 ஆயிரத்து 794 ஏக்கரில், 95 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 785 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்" என்று கூறினார்.
TN Agriculture budget 2026: High yield with less water
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.