FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மாணவர்களுக்கு பயோமெட்ரிக் வருகை கட்டாயம்! உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு!

பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது பற்றி..

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 12:58 pm IST
உச்ச நீதிமன்றம் - X
பகிர்:

போலி கல்வி நிறுவனங்களை ஒழிக்கும் நோக்கில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டாய பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கட்டாய வருகைப் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என வழக்குரைஞர் என். கே. கோஸ்வாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க நீதிமன்றம் விரும்பவில்லை என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள் பி. நரசிம்மா மற்றும் அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரான வழக்குரைஞர் என். கே. கோஸ்வாமியை உயர்நீதிமன்றத்தை அணுக அனுமதி அளிப்பதாக கூறிய அந்த அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.

Advertisement

Advertisement

பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளின் நேரத்திற்குச் சட்டரீதியான வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், வெற்றி குறித்த புள்ளிவிவரங்களைத் திரித்துக் கூறுதல் மற்றும் தவறான விளம்பரங்களுக்காகத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றைத் தடை செய்யும் வகையிலான கட்டாய நடத்தை விதிகள் பயிற்சி மையங்களுக்கு வகுக்கப்பட வேண்டும் என்றும் கோஸ்வாமி மனு அளித்திருத்திருந்தார்.

அரசியலமைப்பின் 32-வது பிரிவு, குடிமக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகும் உரிமையை வழங்குகிறது.

அதனடிப்படையில், இந்த வழக்கு குறித்து மனுதாரர் கோஸ்வாமியை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

The Supreme Court on Friday refused to entertain a PIL seeking direction to the Centre and States for a mandatory biometric-based attendance system for school students to dismantle dummy educational institutions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments