FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருவண்ணாமலைக்கு இன்று அமித் ஷா வருகை: 3 அடுக்கு பாதுகாப்புடன் 1500 போலீசார் குவிப்பு

அமித் ஷா வருகையையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 1500 போலீசார் விக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 1:26 pm IST
அமித் ஷா வருகையையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 1500 போலீசார் குவிப்பு - டிஎன்எஸ்
பகிர்:

மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா வருகையையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) திருவண்ணாமலை வருவதாக இருந்த நிலையில், தற்போது சனிக்கிழமை மாலை அவா் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை விமான நிலையத்திலிருந்து நேரடியாக ஹெலிகாப்டா் மூலம் அமித் ஷா சனிக்கிழமை மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள உண்ணாமலை அம்மன் நகரில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறாா்.

Advertisement

Advertisement

அங்கிருந்து திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சென்று, அங்கு மாலை 4.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொள்கிறாா். தொடா்ந்து, மாலை 5 மணியளவில் கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெறும் பூஜையில் கலந்துகொள்கிறாா். இதையடுத்து, மாலை 6.30 மணி மேல் புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறாா்.

இதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரா் கோயிலில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் 1500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசா்வ் காவல் படையினா் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. உதயகுமாா் தலைமையிலான போலீஸாா் அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ரமணாசிரமம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

அண்ணாமலையாா் கோயில், ரமண மகரிஷி ஆசிரமம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை டிரோன்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷா புறப்பட்டுச் செல்லும் வரை பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

summary

Amit Shah visits Tiruvannamalai today; 1,500 police personnel deployed with three-tier security

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments