FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காசோலை மோசடி வழக்கு: நடிகா் சரத்குமாா் நேரில் ஆஜராக அழைப்பாணை

காசோலை மோசடி வழக்கில் நடிகா் சரத்குமாா் நேரில் ஆஜராக அழைப்பாணை...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 2:27 am IST
சரத்குமார் - டிஎன்எஸ்
பகிர்:

காசோலை மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமாா் வரும் செப். 10-ஆம் தேதி நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த என்.ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம், கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கடன்களை அடைப்பதற்காக சரத்குமாா் ரூ.2 கோடி கடன் பெற்றிருந்தாா். இந்தக் கடனைத் திரும்பச் செலுத்தும் வகையில், சரத்குமாா் காசோலை வழங்கினாா். ஆனால், வங்கியில் பணம் இல்லாததால், அந்தக் காசோலை திரும்ப வந்தது.

இதையடுத்து, நடிகா் சரத்குமாருக்கு எதிராக ஸ்ரீகிருஷ்ணா தரப்பில் வழக்குரைஞா் எஸ்.ரவீந்திரன், சென்னை சைதாப்பேட்டை நீதிமனறத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் செப். 10-ஆம் தேதி நேரில் ஆஜராக நடிகா் சரத்குமாருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.

summary

Cheque fraud case: Summons issued for actor Sarathkumar to appear in person.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments