FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 11 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 7:21 pm IST
முதல்வர் விஜய்
பகிர்:
Updated On : 11 ஆகஸ்ட் 2026, 7:21 pm IST

வேலை இல்லை என்பதால் பிக் பாஸ் சென்றேன்: திவ்யா கணேசன்

வேலை இல்லை என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக நடிகை திவ்யா கணேசன் தெரிவித்துள்ளார்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 7:20 pm IST

2026 ஆம் ஆண்டின் சிறந்த தொடர் எதிர்நீச்சல் -2!

2026 ஆம் ஆண்டின் சிறந்த தொடராக எதிர்நீச்சல் தொடர்கிறது தொடர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை இயக்குநர் திருச்செல்வம் தனது நாயகிகளுடன் பெற்றுக்கொண்டார்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 7:20 pm IST

இன்ஸ்டாகிராமில் 18+ ரீல்ஸ்களை நீக்குவது எப்படி?

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான ரீல்ஸ் விடியோக்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட வகையான விடியோக்கள் மட்டும் அடிக்கடி வருகிறதா? அதனை சரி செய்துகொள்வதற்கான வழிமுறையை இன்ஸ்டாகிராம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 7:00 pm IST

வாட்ஸ்ஆப்பில் 'கெஸ்ட் மோட்'!... செயலி இல்லாதவர்களுடனும் இனி உரையாடலாம்!

வாட்ஸ்ஆப் செயலியில் புதிதாக கெஸ்ட் மோட் என்ற அம்சம் அறிமுகமாகவுள்ளது. இது தொடர்பான சோதனை முயற்சியில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 6:39 pm IST

டைம் டிராவலிங் முயற்சி வெற்றியா! 4413-ம் ஆண்டில் வானில் கார்கள், சாலை முழுக்க ரோபோக்களா?

டைம் டிராவலிங் செய்து பார்த்து வந்தவர் என்று தன்னைத்தானே கூறிக் கொள்ளும் ஒருவரின் நேர்காணல்தான், சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாகி வருகிறது.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 6:39 pm IST

த்ரிஷா வீட்டில் மற்றொரு பிறந்தநாள் கொண்டாட்டம்! அதே நீலக்கண்! யாருக்கு?

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளன்று, நடிகை த்ரிஷாவுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், மற்றொரு பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களை த்ரிஷா பகிர்ந்துள்ளார்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 6:38 pm IST

நாளை முழு சூரிய கிரகணம்: எந்தெந்த நாடுகளில் காணலாம்? தவறவிட்டால்...

விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், புதன்கிழமை (ஆக. 12) நிகழவுள்ளது. எனினும், இந்த அற்புத நிகழ்வை இந்தியாவிலிருந்து காண இயலாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 1:12 pm IST

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 11:53 am IST

கர்நாடகத்திடம் கையேந்த வேண்டியதில்லை! சௌமியா அன்புமணி

இந்த 2 வழிகளில் மழைநீரைச் சேமித்தால் காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் கையேந்த வேண்டியதில்லை என பேரவையில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசினார்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 11:36 am IST

உதயநிதி பதில்

தவெகவுக்கு சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகள் வரும் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ. பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 11:17 am IST

கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சு

மீண்டும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை என்பது விவசாயிகளுக்கும் நல்லதல்ல, நாம் பெற்ற உரிமைகளுக்கும் நல்லதல்ல - ஓபிஎஸ் 

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 10:55 am IST

ராஜ்மோகன் விமர்சனம்

இடம் மாறினாலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்திருக்கிறார் செங்கோட்டையன் என அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 10:55 am IST

ஓபிஎஸ் vs செங்கோட்டையன்

நீங்கள் இடம்மாறி இருக்கிறீர்கள். அதற்காக துதி பாடத் தேவையில்லை என பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ஓ. பன்னீர்செல்வம் பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 10:55 am IST

எம்.பி.க்கள் போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 10:55 am IST

விலை உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 11) அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்துள்ளது.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 10:55 am IST

தொடரவேண்டும்

பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 10:55 am IST

போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி

'போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு' என்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் தலைமையில், மாணவர்கள் அனைவரும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 10:55 am IST

மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்

சட்டப்பேரவையில் நேற்று பேசிய கடையநல்லூர் மதிமுக எம்எல்ஏ  ராஜேந்திரன், நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை வாசிக்கும்போது தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல் விட்டுவிட்டார் என்றும் சில சொற்றொடரில் இலக்கண பிழை இருந்தது என்றும் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments