முந்தைய ஆட்சிகளில் கொண்டுவந்த பயனுள்ள திட்டங்கள் தொடரும்: முதல்வர் விஜய் சுதந்திர நாள் உரை!
முந்தைய ஆட்சிகளில் கொண்டுவந்த பயனுள்ள திட்டங்கள் தொடரும் என முதல்வர் விஜய் பேசியது பற்றி...
முந்தைய ஆட்சிகளில் கொண்டுவந்த பயனுள்ள திட்டங்கள் தொடரும் என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
சுதந்திர நாளையொட்டி, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் சனிக்கிழமை (ஆக.15) காலை 8.45 மணியளவில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
இதையடுத்து, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்த முதல்வர் விஜய், உரையாற்றியதாவது:
Advertisement
Advertisement
தங்களுடைய உயிரை, வாழ்க்கையை, உடமையை இழந்து நமக்காக சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த நம்முடைய சுதந்திர போராட்ட தியாகிகள் அனைவருக்கும் எனது வீர வணக்கங்கள். நம்மை அடிமை போன்று வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே மக்கள் மத்தியில் ஒற்றுமை வரத் தொடங்கும். அனைவரும் ஒரே மாதிரி சிந்தித்து ஒன்றுசேர தொடங்குவார்கள். அப்படி ஒன்றுசேரும் இடத்தில் சாதி, மதம், மொழி அனைத்தும் உடையும் இடத்தில் கிடைப்பதுதான் உண்மையான சுதந்திரம் என்று கூறினார்.
இதையடுத்து, தவெக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்களைப் பற்றி கூறிய முதல்வர் விஜய், முந்தைய ஆட்சிகளில் கொண்டுவந்த பயனுள்ள திட்டங்கள் தொடரும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் தியாகிக்ளுக்கும் அறிமுகப்படுத்தவுள்ள சிலத் திட்டங்களை முதல்வர் விஜய் அறிவித்தார்.
முதல்வர் விஜய் அறிவித்த திட்டங்கள்:
நாட்டின் பாதுகாப்புக்காக அரும்பாடுபட்ட முன்னாள் படை வீரர்களின் நலன்கருதி, இரண்டு மகள்களுக்கு திருமண நிதியுதவி ரூ. 25,000 லிருந்து ரூ. 50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர நிதியுதவி ரூ. 5,000 லிருந்து ரூ. 7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 23000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாநில அரசால் விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் ரூ. 12500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
வீர பாண்டிய கட்டபொம்மமன், முத்துராமலிங்க வீஜய ரகுநாத சேதுபதி, மருது சகோதரர்கள் மற்றும் வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
Chief Minister Vijay stated that beneficial schemes introduced by previous administrations would be continued.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.