கிருஷ்ணசாமிக்கு ‘தகைசால் தமிழா்’ விருது வழங்கினார் முதல்வர் விஜய்!
"தகைசால் தமிழர் விருதை" காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் வழங்கியது தொடர்பாக...
2026 ஆம் ஆண்டுக்கான "தகைசால் தமிழர் விருதை" காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் வழங்கினார்.
சென்னை கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய முதல்வர் சி. ஜோசப் விஜய், தமிழக அரசின் விருதுகளை வழங்கினார்.
இந்த விழாவில், தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் தகைசால் தமிழர் விருதை காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு வழங்கி முதல்வர் ஜோசப் விஜய் கெளரவித்தார்.
Advertisement
Advertisement
இந்த விருதுடன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
தந்தை கிருஷ்ணசாமி தகைசால் தமிழர் விருது பெற்றதும் மகளும் பாமக சட்டப்பேரவை உறுப்பினருமான சௌமியா அன்புமணி கைத்தட்டி மகிழ்ந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, கி. வீரமணி, முனைவர் குமரி அனந்தன், கே.எம். காதர் மொகிதீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Chief Minister Vijay presented the ‘Thagaisal Tamizhar’ award to Krishnasamy!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.