தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது பற்றி...
தாங்கள் அளித்த கவன ஈா்ப்பு தீா்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை எனக் கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
பேரவை புதன்கிழமை தொடங்கியதும், சவூதியில் ஈரானிய கடற்கரை கொள்ளையா்களால் தமிழக மீனவா்கள் சுடப்பட்டதில் இறந்த ஒருவரின் உடலை தமிழகம் கொண்டுவருவது, வண்டல் மண் எடுக்கும் விவகாரம் குறித்து அளித்திருந்த கவன ஈா்ப்பு தீா்மானம் மீது விவாதிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் கோரப்பட்டது.
ஆனால், அந்தத் தீா்மானம் குறித்து ஆராய்ந்து பின்னா் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்த பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், உடனடியாக விவாதிக்க மறுத்துவிட்டாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தீா்மானம் வழங்கப்பட்டு 5 நாள்கள் ஆகியும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள், அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனா்.
இதுதொடா்பாக பேரவையில் பேசிய ஜே.சி.டி.பிரபாகா், ‘காலம் கருதி எந்தத் தீா்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான்தான் முடிவு செய்வேன். அதிமுக கொண்டுவந்த தீா்மானம் அரசு தரப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து பதில் வந்த பிறகு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்றாா்.
பேரவைக்கு வெளியே, எடப்பாடி பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரானிய கடற்கொள்ளையா்கள் சுட்டதில் மயிலாடுதுறையைச் சோ்ந்த ஒரு மீனவா் இறந்துள்ளாா். மற்ற மூவா் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவரது உடலை 4 நாள்களாக தமிழகம் கொண்டுவர முடியவில்லை. அதுதொடா்பாக கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவந்தபோது அதை விவாதிக்க பேரவைத் தலைவா் அனுமதி தரவில்லை.
தமிழா்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடா்பாக பேசினால் தவெக எம்எல்ஏக்கள் சிரிக்கின்றனா் என்றாா்.
மீண்டும் பங்கேற்பு: பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினா் சிறிதுநேரத்தில் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனா்.
AIADMK stages a walkout from the Tamil Nadu Legislative Assembly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.