விளைபொருள்களை சந்தைப்படுத்த பண்ணைக் கொள்முதல் முறை அறிமுகம்: அமைச்சர் காந்திராஜ்
கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் காந்திராஜ் அறிவிப்பு.
விவசாயிகளின் விளைபொருள்களை சந்தைப்படுத்திட ரூ. 50 கோடி மதிப்பீட்டில் பண்ணைக் கொள்முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று கூட்டுறவுத் துறை காந்திராஜ் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று(ஆக. 20) உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து, அமைச்சர் வ. காந்திராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்:
Advertisement
Advertisement
விவசாயிகள் விளைபொருள்களை சந்தைப்படுத்திட ரூ. 50 கோடி மதிப்பீட்டில் பண்ணைக் கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும்.
விவசாயிகளின் போக்குவரத்து செலவு, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும் மற்றும் லாபகரமான விலை கிடைக்கவும், விவசாயிகளின் விளை நிலங்களின் அருகிலேயே நெல், மஞ்சள், மக்காச்சோளம் மற்றும் தேங்காய் போன்ற தரமான விளைபொருள்கள் இடைத்தரகர்கள் இன்றி சந்தைப்படுத்திட 50 கூட்டுறவு விற்பனை சங்கங்களின் மூலம் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் பண்ணைக் கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும்.
ரூ. 6.90 கோடி மதிப்பீட்டில், 3452 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நுண் தானியங்கி சாதனங்கள் (Micro ATM) நிறுவப்படும்.
சேமிப்புக் கணக்கு துவக்குதல், அடிப்படை வங்கி மற்றும் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குதல், வைப்புகள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்க, வங்கி வசதிகள் குறைவாக உள்ள 3,452 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கப் பகுதிகளில், ரூ. 6.90 கோடி மதிப்பீட்டில் நுண் தானியங்கி சாதனங்கள் (Micro ATM) நிறுவப்படும்.
Co-operatives Department official Gandhiraj has announced the introduction of a farm procurement scheme worth ₹50 crore to market farmers' produce.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.