எம்எல்ஏ-க்களுக்கு சென்னையில் 2 கிரவுண்ட் இடம் தருவதாக சொன்னது யார்? செங்கோட்டையன்
எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியது பற்றி...
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதை கடந்த ஆட்சியில் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம்தான் திமுகவினருக்கு இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களுடன் செங்கோட்டையன் பேசியதாவது, "சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இருக்கிற இடர்ப்பாடுகள் உங்களுக்கே தெரியும். ஒரு எம்எல் ஏறத்தாழ கிராமங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால்தான், அத்தியாவசிய தேவையாக எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்கப்படுகிறது.
இதனை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். சிலர் இதனை வேண்டியதில்லை என்கின்றனர். அது அவர்களின் கருத்து.
Advertisement
Advertisement
முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, எம்எல்ஏ-க்கள் எல்லோருக்கும் சென்னையில் 2 கிரவுண்ட் இடம் கொடுப்பதாகக் கூறினார். ஆனால், அதனை வேண்டாம் என ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர்கள் (திமுக) காலத்தில் செய்ய முடியாததை, இந்த ஆட்சியில் செய்கிறோமே என்ற வருத்தம்தான் அவர்களுக்கு" என்று தெரிவித்தார்.
Minister KA Sengottaiyan stated that Former CM Karunanidhi had promised to provide two grounds of land to MLAs in Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.