FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆம்பூரில் பச்சிளம் குழந்தை விற்பனை- குழந்தையை மீட்டு போலீஸார் விசாரணை

ஆம்பூரில் பிறந்த பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்டது பற்றி....

30 ஆகஸ்ட் 2026, 12:53 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

ஆம்பூரில் பிறந்த பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள மாங்காதோப்பு 3 - வது தெரு சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா (38) - அவாமா (36) தம்பதியினர். ரஹ்மத்துல்லாஹ் டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகளாகின்றது. இவர்களுக்கு 2 ஆண், 2 பெண் குழந்தைகள் என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவாமாக்கு கடந்த 14ஆம் தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்ப சூழ்நிலையின் காரணமாக பிறந்த பெண் குழந்தையை ஆக. 23ஆம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த சம்ரீன் தாஜ்க்கு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குழந்தையை விலைக்கு வாங்கிய கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சையத் அக்பரின் மனைவி சம்ரீன் தாஜ் (30) என்பவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப சூழ்நிலை காரணமாக தம்பதி பச்சிளம் குழந்தையை விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

Infant sold in Ambur: Incident causes widespread commotion.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments