FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறித்துள்ளதைப் பற்றி...

Updated On : 17 ஜனவரி 2026, 12:07 pm IST
அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.
பகிர்:

ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையொட்டி, ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

இந்த நிலையில் இன்று (ஜன.17) உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாய் துவங்கியது. இந்தப் போட்டியை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து அலங்காநல்லூர் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சாலைகளின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண காலை 11.10 மணியளவில் விழா மேடை திடலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் பி. மூர்த்தி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கே.என். நேரு, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுப் பொருள்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.

போட்டியைக் கண்டுகளித்த முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்ட்டதை வெளிப்படுத்திய காளைகளின் உரிமையாளருக்கு தங்க மோதிரம் அணிவித்து கௌரவப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் இரண்டு முக்கிய அறிவிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், மாடுபிடி வீரர்களின் நீண்டநாள்களாக சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து வந்தனர்.

வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு, வீரர்களுக்குப் பரிசுப் பொருள்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக முதல்வர் ஸ்டாலின், “ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளைப் அடக்கும் சிறந்த வீரருக்கு கால்நடைப் பராமரிப்புத்துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என்றும், அலங்காநல்லூரில் காளைகளுக்கு ரூ.2 கோடியில் சிறந்த உயர்தர சிகிச்சை, பயிற்சி மையம் அமைக்கப்படும்” என்றும் அறிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்தக் கோரிக்கை மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சி, உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments