FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 17 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 17 ஜூலை 2026, 6:47 pm IST
ஜெயலலிதா | வைகோ | மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 ஜூலை 2026, 6:47 pm IST

குஷ்பு மகள் திருமணம்! த்ரிஷாவுக்கு புகைப்படக் கலைஞராக மாறிய பிரபல நடிகை!

இன்னும் முடியவில்லையா, நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.

Updated On : 17 ஜூலை 2026, 6:47 pm IST

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்! 33 கேள்விகள் என்னென்ன?

வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை ஆக.1 முதல் ஆக. 30 வரை தமிழகத்தில் நடத்தவுள்ளது. அதற்கு முன்னதாக, மக்களே சுயமாக தங்கள் விவரங்களை இணையம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி தொடங்கியிருக்கிறது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தன்னுடைய விவரங்களைப் பதிவு செய்து அது குறித்த விடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Updated On : 17 ஜூலை 2026, 6:30 pm IST

அரசுப் பேருந்து கட்டணத்தில் 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்: ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம்

அரசுப் பேருந்து கட்டணத்தில் 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாக அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Updated On : 17 ஜூலை 2026, 4:26 pm IST

டிஜிபியிடம் குதிரை பேரம் புகார்! அதிமுக கொறடா

அதிமுக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடைபெற்றதாகத் தமிழ்நாடு காவல்துறைத் தலைவரை (டிஜிபி) சந்தித்து அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 4:25 pm IST

நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!

Updated On : 17 ஜூலை 2026, 4:25 pm IST

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 ஆம் தேதியே கடைசி நாளாகும் என்றும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 11:21 am IST

50 டெண்டர்கள் ரத்து

தமிழ்நாடு முழுவதும் நகராட்சி நிர்வாகத்துறையின் 50 குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்து முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 17 ஜூலை 2026, 11:20 am IST

இறுதிப் போட்டியில் டிரம்ப்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் பார்வையிடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 11:07 am IST

தியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!

தியாகிகள் நாளில் இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

Updated On : 17 ஜூலை 2026, 11:04 am IST

2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோ

2006-ல் அதிமுகவுடன் உடன்பாடு வைத்தது. நான் நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், அதிமுகவுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் நமது இயக்கம் வலுவும் பொலிவும் பெற்றிருக்கும்.

2017-ல் பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு கொண்டது இரண்டாவது பெரும் பிழையாகும்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

Updated On : 17 ஜூலை 2026, 11:04 am IST

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (ஜூலை 17) 480.95 புள்ளிகள் உயர்ந்து 77,656.56 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 125.05 புள்ளிகள் உயர்ந்து 24,201 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Updated On : 17 ஜூலை 2026, 11:04 am IST

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: இருவர் பலி; 100 பேர் காயம்

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் லட்சக்கணக்கானோர் குவிந்ததில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியாகினர். மேலும், கூட்டநெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Updated On : 17 ஜூலை 2026, 11:04 am IST

அரசுமுறை பயணத்தில் விதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!

மத்திய அரசின் அனுமதியின்றி அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றதாக அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments