விஜய்யை தூக்கிப் பிடிப்பதில் கூட்டணி கட்சித் தலைவர்களிடையே சண்டை! அதிமுக கிண்டல்!
விஜய்யை தூக்கிப் பிடிப்பது யார் என்பதில் போட்டா போட்டி நிலவுவதாக அதிமுக கிண்டல்.
விஜய்யை தூக்கிப் பிடிப்பது யார் என்பதில் கூட்டணி கட்சித் தலைவர்களிடையே போட்டி நடைபெறுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கிண்டலாகப் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்திருப்பதாவது:
”தவெக கட்சி 108 தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற காரணத்தினால், ஆட்சி அமைக்கிற பெரும்பான்மை இல்லை என்பதால், 4 முறை ஆளுநரிடம் அலைந்தது மட்டுமல்ல, பெரும்பான்மை நிரூபிப்பதற்காக தேர்தலிலேயே விசில் சின்னத்தை எதிர்த்து போட்டியிட்ட மற்ற கட்சிகளில், குறிப்பாக, கொள்கை மாறுபாடு உள்ள கட்சிகளின் தயவை எதிர்பார்த்து, அவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டுதான், இன்றைக்கு த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தச் சூழ்நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கூட்டணி கட்சித் தலைவர்கள் கருத்துகளை வெளியிடுகிறார்கள்.
விஜய்யை தூக்கிப் பிடிப்பதில் யார் என்பதிலே கூட்டணி கட்சித் தலைவர்களிடையே போட்டி நடைபெறுகிறது. அதில், முதலிடத்தில் யார் வருவது என்பதில் திருமாவளவன், வைகோ ஆகியோர் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் தமிழ்நாட்டுடைய நிலைமை. இது மக்களுக்கு பேர் அதிர்ச்சியை தருகிறது.
அமைச்சர்கள் ஆனந்த் ஒர் அணியாகவும், ஆதவ் அர்ஜுனா ஒர் அணியாகவும், நிர்மல் குமார் ஒர் அணியாகவும், ராஜ் மோகன் ஒர் அணியாகவும், அதிமுகவிலிருந்து அகதிகளாக சென்றவர்களுக்கு தலைமை தாங்கும் செங்கோட்டையன் ஒர் அணியாகவும், அமைச்சர்களுக்குள் அணி அணியாக அதிகாரப் போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், தலைமைச் செயலர் தலைமையில் ஓர் அணியாகவும், முதல்வர்களுடைய நட்பு வட்டாரத்தில் முதல்வர் விஜய்யின் ஆலோசர்கள் அணி என்றும், முதல்வருடைய நலம் விரும்பிகள் அணி என்றும், தனித்தனியாக பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லை என்கிற நிலையும் வந்திருக்கிறது.
இதனால், ஒட்டுமொத்தமாக சுகாதாரத் துறை, தொழில் துறை, கல்வித் துறை, நகராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை என அத்தனை துறைகளும் முடங்கிப் போய் கிடக்கிறது” என்றார்.
Former AIADMK Minister R.B. Udhayakumar has remarked sarcastically that there is a competition among alliance party leaders over who gets to champion Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.