FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வர், தளபதி விஜய்யிடம் முறையிடுவேன்.. வடக்கிந்திய லாரி ஓட்டுநர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த காவலர்!

முதல்வர் விஜய்யிடம் சொல்லுவேன்.. வடக்கிந்திய லாரி ஓட்டுநர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த காவலர்!

Updated On : 21 ஜூலை 2026, 6:43 pm IST
விடியோ காட்சிகள் - video grab
பகிர்:

சரக்கு எதுவும் இல்லாத காலி கண்டெய்னருடன் திரும்பிக் கொண்டிருந்த வடக்கிந்திய மாநிலத்தைச் சேர்ந்த லாரியை நிறுத்திய காவலரிடம், லஞ்சம் கேட்டால் முதல்வர் விஜய்யிடம் முறையிடுவேன் என்ற லாரி ஓட்டுநர் சொன்ன விடியோ வைரலாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், முதல் முறையாகப் போட்டியிட்ட தவெக, தனிப்பெரும்பான்மை கட்சியாக வென்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மே 10ஆம் தேதி ஆட்சியமைத்தது.

நடிகராக இருந்து தமிழக முதல்வராக உயர்ந்துள்ள தவெக தலைவர், முதல்வர் விஜய், தன்னுடைய ஆட்சி அதிகாரத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. அதில் ஒன்றுதான், கரூரில் பேசிய போது, யாராவது லஞ்சம் கேட்டால் தமிழ்நாட்டில் விஜய்யின் ஆட்சி நடக்கிறது, லஞ்சம் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள் என்று சொன்னார்.

Advertisement

Advertisement

இது தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, எப்படியோ, தமிழ்நாட்டுக்கு வந்து செல்லும் வடக்கிந்திய லாரி ஓட்டுநர்கள் வரை சென்று சேர்ந்திருக்கிறது.

இந்த நிலையில்தான், தமிழ்நாட்டிலிருந்து காலி கண்டெய்னருடன் சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்திய காவலரைப் பார்த்ததும், அந்த லாரி ஓட்டுநர், விடியோ எடுக்கத் தொடங்கிவிட்டார். அந்த விடியோவில், காவலர் லாரியை நிறுத்தச் சொல்ல, கண்டெய்னர் காலியாக இருப்பதாக லாரி ஓட்டுநர் கூறுகிறார்.

வேண்டுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள், கண்டெய்னரில் எந்த சீலும் வைக்கப்படவில்லை. அதனுள் எதுவும் இல்லை என்றார். அதற்கு காவலரோ, நான் முதலில் சோதனை செய்கிறேன். எங்கே பில் என்று கேட்டு தொல்லை கொடுக்கிறார்.

இதையடுத்து லாரி ஓட்டுநர் சொன்னதுதான் ஹைலைட். என்னிடம் தமிழக முதல்வர் தளபதி விஜய்யின் தொலைத்தொடர்பு எண் இருக்கிறது. நான் இந்த விடியோவை முதல்வர் விஜய்க்கு அனுப்புவேன் என்று கூறுகிறார்.

அடுத்து, நான் சொல்வதைக் கேள் என்று காவலர் தடுக்க, இதோ விடியோவை அனுப்பி விடுகிறேன் என்று ஹிந்தியில் கூறுகிறார் ஓட்டுநர்.

உண்மையில் முதல்வரின் தொலைத்தொடர்பு என்று லாரி ஓட்டுநர் சொல்வது, தமிழக அரசு வழங்கியிருக்கும் உதவி எண்கள்தான். 1800 - 425 - 1555 மற்றும் வாட்ஸ்ஆப் உதவி எண் - 98981 80936 என்பதுதான்.

இதனால் சற்று அதிர்ச்சியடைந்த காவலர், லாரி ஓட்டுநரிடமிருந்து செல்போனைப் பிடுங்க முயற்சிக்கிறார். இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விடியோ முதல்வர் தனிப் பிரிவுக்கு சென்று சேர்ந்ததா, காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்தெல்லாம் தகவல் எதுவும் இல்லை.

ஆனால், வடக்கிந்திய லாரி ஓட்டுநர் வரை, விஜய் ஆட்சியில் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்பது சென்று சேர்ந்திருக்கிறது என்பதுதான் பரவலாக பேசப்படும் விவகாரமாகியிருக்கிறது.

summary

"I will complain to the Chief Minister and Thalapathy Vijay..." — A police officer was shocked to hear this from a North Indian lorry driver!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments