இனி புதுச்சேரி போக வேண்டாம்.. டாஸ்மாக்கில் புதிய வகை பீர், விஸ்கி பிராண்டுகள்!
மதுப்பிரியர்கள் இனி புதுச்சேரி போக வேண்டாம் டாஸ்மாக்கில் புதிய வகை பியர், விஸ்கி பிராண்டுகள் அறிமுகமாகவிருக்கின்றன.
டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், தமிழக மக்கள் மதுபானம் வாங்க புதுச்சேரி செல்வதைத் தடுக்கும் வகையிலும் புதிய பீர் மற்றும் விஸ்கி பிராண்டுகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வரும் ஆறு மாதத்தில் புதிய வகை மதுபானங்கள் அலமாரிகளை அலங்கரிக்கவிருக்கின்றனவாம்.
தமிழக மக்களுக்கு அதிக சாய்ஸ்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் வார இறுதி நாள்களில் மதுபானம் வாங்குவதற்காக இளைஞர்கள் பலரும் சென்னை அல்லது பெங்களூர் செல்கிறார்கள். இதனால், டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, அங்கு அதிகம் விற்பனையாகும் புதிய வகை மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக புதிய வகை பீர் வகைகளை கொண்டு வந்து விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
மேலும், வசதி இருக்கும் இடங்களில் சிறிய மதுபானக் கடைகளை பெரிதாக மாற்றவும் பழடைந்து கிடக்கும் கடைகளை பெயிண்ட் அடித்து மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
குறிப்பாக புதிய வகை பீர் மதுபானங்களை விற்பனை செய்ய வசதியாக டாஸ்மாக் எலைட் கடைகளில் குளிர்பதன இயந்திரங்கள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அண்மையில், தமிழக அமைச்சரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, அண்டை மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் மதுபான வகைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்டை மாநிலங்களில் மதுபானங்களை விற்பனை செய்யும் மதுபான ஆலைகள், தமிழகத்துக்குள் நுழைய ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சுங்க வரியை ஏற்றுக் கொள்ள வேண்டியது இருக்கும். சுங்க வரி அதிகம், வாட் மற்றும் விற்பனை வரியால் அண்டை மாநிலங்களை விட இங்கு சற்று விலை அதிகமாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பீர்கள் தற்போது விற்கப்பட்டு வருகின்றன. அதுபோல, விஸ்கியிலும் அதிக பிராண்டுகள் இல்லை. மேலும் குறைந்த அளவில் வாங்க முடியாத நிலையில் நீடிக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No need to go to Puducherry anymore—new brands of beer and whisky at TASMAC!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.