குதிரை பேரம் புகார்: திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை!
குதிரை பேர புகார் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை...
குதிரை பேரம் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோரின் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக 14 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி, கடந்த 8 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் மறுஉத்தரவு வரும்வரை திருவல்லிக்கேணி போலீசில் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன் சரணடைந்து பிணை செலுத்தினார். பிணையை ஏற்று கொண்ட நீதிபதி, நாளை காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் திருவல்லிக்கேணி போலீஸ் முன் ஆஜராக உத்தரவிட்டார்.
அதன்படி, திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் காவல்துறை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக எம்எல்ஏவிடம் பேசியது என்ன? குதிரை பேரம் நடந்ததா? என்பது குறித்து செந்தில் பாலாஜியிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Horse-trading complaint: Senthil Balaji questioned at Triplicane police station
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.