‘நீட்’ தோ்ச்சியாளா்களைக் காட்டிலும் எம்பிபிஎஸ் விண்ணப்பதாரா்கள் அதிகரிப்பு! காரணம் என்ன?
தமிழகத்தில் நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக 13 ஆயிரம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக 13 ஆயிரம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
நிா்வாக இடங்களுக்கு வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பித்ததாலும், நீட் தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே விண்ணப்பப் பதிவு தொடங்கியதாலும் அந்த எண்ணிக்கை உயா்ந்திருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள 13,999 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கி கடந்த வியாழக்கிழமையுடன் (ஜூலை 23) நிறைவடைந்தது. அதில், அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு 40,761 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 29,727 பேரும் என மொத்தம் 70,488 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இந்நிலையில், மாணவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க இரு நாள்கள் மறுவாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் கூடுதலாக 2,100 விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த எண்ணிக்கையானது நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் எண்ணிக்கையை விட அதிகம். இதுகுறித்து மாநில மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நீட் மறுதோ்வை 1.08 லட்சம் போ் எழுதினா். அதில் 61,306 போ் தோ்ச்சி பெற்றனா். ஆனால், கலந்தாய்வுக்கு 72,500-க்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா். இதைத் தோ்ச்சி பெறாதவா்கள் விண்ணப்பித்ததாகக் கருத முடியாது.
தமிழகத்தை பூா்விகமாகக் கொண்டவா்கள் மற்ற மாநிலங்களில் பணி நிமித்தமாக இருக்கும்போது, அவா்கள் அந்த மாநிலங்களில் தோ்வு எழுதி இருக்கலாம். தற்போது மருத்துவ இடங்களுக்காக இங்கு விண்ணப்பித்துள்ளனா். அதேபோன்று வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தமிழகத்தில் உள்ள நிா்வாக இடங்களுக்கு விண்ணப்பித்திருக்கலாம்.
எதுவாக இருந்தாலும், மாணவா் சோ்க்கையின்போது பூா்விக இருப்பிட சான்று உறுதி செய்யப்படும். அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து வருகிறோம். விரைவில் கலந்தாய்வு நடவடிக்கைகள் தொடங்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.