FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 27 ஜூலை 2026, 2:20 pm IST
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு- - கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜூலை 2026, 2:20 pm IST

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

தமிழக பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை (ஜூலை 28) மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு...

Updated On : 27 ஜூலை 2026, 2:02 pm IST

பாளையங்கோட்டை சிறையில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்தார் உதயநிதி!

Updated On : 27 ஜூலை 2026, 2:02 pm IST

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!

Updated On : 27 ஜூலை 2026, 1:33 pm IST

சோனம் வாங்சுக் டிஸ்சார்ஜ்

ஹரியாணாவில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இன்று டிஸ்சார்ஜ் ஆகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜூலை 2026, 1:17 pm IST

மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கை

Updated On : 27 ஜூலை 2026, 1:17 pm IST

சகாயம் ஐஏஎஸ் -க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

Updated On : 27 ஜூலை 2026, 1:17 pm IST

பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று (ஜூலை 27) கடும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Updated On : 27 ஜூலை 2026, 1:14 pm IST

தலைமை நீதிபதி கண்டனம்

போராட்டங்களின்போது காவல்துறை மேற்கொள்ளும் அத்துமீறல்களை நியாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜூலை 2026, 1:05 pm IST

இணையத்தில் ஜன நாயகன் பார்த்தவருக்கு முன்ஜாமீன்!

திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட ஜன நாயகன் படத்தை இணையதளத்தில் பார்த்தார் என்பதற்காக வழக்குபதிவு செய்யப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜூலை 2026, 12:29 pm IST

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கு: மேல் விசாரணை நடத்த அனுமதி

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜூலை 2026, 12:26 pm IST

காமன்வென்ல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

Updated On : 27 ஜூலை 2026, 11:22 am IST

எதிர்க்கட்சிகள் அமளி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளும் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

Updated On : 27 ஜூலை 2026, 11:21 am IST

ராகுல் கண்டனம்

பிகாரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜூலை 2026, 11:07 am IST

கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!

கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜூலை 2026, 11:01 am IST

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27)

வாரத்தின் முதல்நாளான இன்று(திங்கள்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments