FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு: பழமையான விநாயகர் கோயில் இடிப்பு!

விழல் கட்டி பிள்ளையார் கோயில் நெடுஞ்சாலைத் துறையினரால் இடித்து அகற்றப்பட்டது பற்றி..

Updated On : 29 ஜூலை 2026, 11:54 am IST
விழல் கட்டி பிள்ளையார் கோயில் - file photo
பகிர்:

சிதம்பரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விழல் கட்டி பிள்ளையார் கோயில் நெடுஞ்சாலைத் துறையினரால் புதன்கிழமை  இடித்து அகற்றப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் பச்சையப்பன் பள்ளி அருகில் சிதம்பரம் - காட்டுமன்னார் கோயில் செல்லும் நெடுஞ்சாலையில் அருகே  சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சாமி உருவ சிலை இல்லாத, வழிபாடு இல்லாத சிதிலமடைந்த பாழடைந்த விழல் கட்டி பிள்ளையார் கோயில் உள்ளது. இக்கோயில் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையிலிருந்தது.

போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த கோயிலை அகற்றத்  தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம். என். ராதா கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்குக் கோரிக்கை அளித்து வலியுறுத்தினார்.

மேலும். இக்கோயிலை இடிப்பது குறித்துச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைக் கடந்த 18 மாதங்களாக சந்தித்து போக்குவரத்துக்கு இடையூறாகத் தினந்தோறும் விபத்துக்குக் காரணமாக இருக்கக்கூடிய இக்கோயிலை இடிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. அதிகாரிகள் இடிப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுக் கடந்த 4 மாதங்கள் ஆகியும்  இடிக்கப்படாமல் இருந்தது. இக்கோயிலை இடிக்க இந்து சமய அறநிலையத்துறை வலியுறுத்தி வருகிற 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தார்.

இதனை அடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின் பேரில் புதன்கிழமை காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்கலைட் இயந்திரம் மூலம் விழல் கட்டி பிள்ளையார் கோயில் இடித்து அகற்றப்பட்டது.

Regarding the demolition and removal of the Vizhal Katti Pillaiyar Temple by the Highways Department...

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments