தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்: மு.க. ஸ்டாலின்
தமிழகத்தில் மின்கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்திருப்பதாக தவெக அரசு மீது மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருப்பது குறித்து...
தமிழகத்தில் மின்கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்திருப்பதாக தவெக அரசு மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...
முதலில் மின்வெட்டுப் பிரச்னை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்னை.
Advertisement
Advertisement
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் அளவீடுகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
M.K. Stalin accuses the TVK government of causing hardship to the public regarding electricity charges in Tamil Nadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.