FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நீங்கள் தமிழனா? இந்தியனா? மனக் குமுறலை வெளிப்படுத்திய அண்ணாமலை!

நீங்கள் தமிழனா? இந்தியனா? மனக் குமுறலை வெளிப்படுத்திய அண்ணாமலை!

Updated On : 5 ஜூன் 2026, 12:15 pm IST
கே. அண்ணாமலை - கோப்புப் படம்
பகிர்:

நீங்கள் தமிழனா இல்லை இந்தியனா என வடமாநிலத்தவர்எ என்னிடம் கேட்டனர் என்று பாஜகவிலிருந்து ராஜிநாமா செய்திருக்கும் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது நம்ம இயக்கம் (We The Leader) என்ற அமைப்பை இன்று தொடக்கியிருப்பதாகவும், அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜகவிலிருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கவிருக்கும் நிலையில், இன்று அண்ணாமலையின் ராஜிநாமாவை கட்சித் தலைமை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அண்ணாமலை இன்று நேரலையில் தோன்றி தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கியிருக்கிறார்.

அப்போது அவர் பேசுகையில், பாஜகவுக்குள் 18 மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்துவிட்டது. கட்சியிலிருந்து வெளியேற டிசம்பர் 4ஆம் தேதியே கூறினேன். நங்கள் தமிழனா, இந்தியரா என்று வடமாநிலத்தவர் என்னிடம் கேட்டனர். நானோ, பெருமைமிகு இந்தியன், பாரம்பரிய மிக்க தமிழன் என்று பதிலளித்தேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுவரை தமிழ் மண்ணை விட்டுக் கொடுத்தது கிடையாது, தமிழக மக்களுடன் பயணம் செய்ய வேண்டும், அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அவர்களுடன் இருக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன், சிறந்த அரசியலை உருவாக்க முடியுமா என்று போராடிக் கொண்டே இருந்தேன்.

கட்சிக்குள் எனக்கிருந்த கருத்து வேறுபாடு ஏதோ ஒரு சில நாள்களுக்கு முன்பு ஏற்படவில்லை. கிட்டத்தட்ட 18 மாதங்களாக கருத்து வேறுபாடு உள்ளது. என்னுடைய கருத்துகளை பொறுமையாக எடுத்துச் சொல்லி வந்தேன். கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதியே கட்சியிடம் சொல்லிவிட்டேன், பாஜகவிலிருந்து விலகப் போகிறேன் என்று தெரிவித்துவிட்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments