ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்: திமுகவை தவெக அரசு காப்பாற்றுகிறதா?
மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது குறித்து அதிமுக கேள்வி
தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயமான விவகாரத்தில் திமுகவை தவெக அரசு காப்பாற்ற முயற்சிக்கிறதா என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயமான விவகாரம் குறித்து அதிமுக எம்.பி. இன்பதுரை, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, டெண்டர் ஆவண ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது - தவெக அரசின் அலட்சியமா? ஓரங்க நாடகமா? ரகசிய உடன்பாடா? அல்லது திமுகவைக் காப்பாற்றும் திட்டமிட்ட முயற்சியா?
"தவெக அரசு, திமுக அரசின் கார்பன் காப்பியா?" என மக்கள் கேட்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
Advertisement
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் குறிப்பிட்ட கணினிகளில் தரவுகளையும், தகவல்களையும் சேமித்து வைக்கும் 18 ஹாா்டு டிஸ்க்குகள் சில நாள்களுக்கு முன்பு திருடப்பட்டதாக வெளியான தகவல் அனைத்துத் தரப்பினரையும் அதிா்ச்சியடையச் செய்தது.
திருடப்பட்ட ஹாா்டு டிஸ்க்குகளில் ஒப்பந்தப் பணி, கொள்முதல் விவரங்கள், ஒப்பந்த ஊழியா்கள் நியமனம் ஆகியவை குறித்த தகவல்கள், அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி கொள்முதல் விவரங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் முறைகேடு, ஊழல் தொடர்பான துறைரீதியான புகாா்கள் குறித்த விசாரணை அறிக்கைகளும் இருந்ததாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Missing Hard Disks: Is the TVK Government Shielding the DMK?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.