வரும் தேர்தல்களில் நமது கட்சி போட்டியிடும்: அண்ணாமலை
தமிழ்நாட்டில் வரும் தேர்தல்களில் தம் கட்சி போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவிப்பு
தமிழ்நாட்டில் வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையுடன் 18 மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக அண்ணாமலை கூறியதுடன், கட்சியிலிருந்து விலகினார். மேலும், புதிதாக கட்சியும் தொடங்கவிருப்பதாகவும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேரலையில் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டின் அடையாளம், பாரம்பரியத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. எப்போதுமே நான் பெருமைமிகு இந்தியன்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் வரும் தேர்தல்களிலும் தம் கட்சி போட்டியிடும். அதில் மாற்றுக் கருத்து இல்லை" என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும், தனி அமைப்பைக் கட்டமைப்பதற்கும், ஆதரவு பெறுவதற்கும் அவகாசம் வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
summary