FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள்!

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் தவெகவில் இணைந்தது பற்றி...

Updated On : 7 ஜூன் 2026, 1:52 am IST
தவெக அலுவலகத்தில்.... - TVK
பகிர்:

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எம்.சி.சம்பத், கடம்பூா் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆா்.சிவபதி ஆகியோா் தங்களது ஆதரவாளா்களுடன் தவெகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இருவரும் தவெகவில் சோ்ந்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 108 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, தவெக அரசு சட்டப்பேரவையில் நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் தவெக அரசுக்கு வாக்களித்து பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உதவினா்.

Advertisement

Advertisement

அதன் பின்னா், எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சோ்ந்த 4 எம்எல்ஏ-க்கள் தங்களின் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சா்களான எம்.சி. சம்பத், கடம்பூா் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆா்.சிவபதி, பெரம்பலூா் தொகுதி முன்னாள் எம்.பி. ஆ.இளவரசன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் சுந்தர்ராஜ், ராஜமுத்து, மான்ராஜ், ராஜவா்மன் பன்னீா்செல்வம், மு.முருகன், என்.சிவா மற்றும் திமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் பி.காமராஜ், எம்.எஸ்.சண்முகம் உள்பட 2,500-க்கும் மேற்பட்டோா் தவெகவில் அக்கட்சியின் பொதுச் செயலரும் அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் இணைந்தனா்.

அக்கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, மரிய வில்சன், ப.வெங்கடரமணன், ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் ஆகியோா் பங்கேற்றனா்.

எதிா்பாா்ப்புக்கு ஏற்ப பணி செய்வோம்- கடம்பூா் ராஜு: இணைப்பு விழாவில் பேசிய முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜு, 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைய விஜய் நற்பணி மன்றம் உறுதுணையாக இருந்தது. அதிமுக வேட்பாளா்களுக்கு அவா்கள் நேரடியாகப் பணியாற்றினாா்கள். தவெக எதிா்பாா்ப்பு என்னவோ, அதற்கு ஏற்ப நாங்கள் பணி செய்வோம் என்றாா்.

பனையூர் அலுவலகத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெ. கருணாநிதி - X
summary

Former AIADMK ministers join TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments