பிழைகளுடன் வெளியான சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட முன்னோட்ட விடியோ!
சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட முன்னோட்ட விடியோ, பிழைகளுடன் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருவது குறித்து...
செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட முன்னோட்ட விடியோவில் பிழைகளுடன் தமிழ் சொற்கள் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
விடியோவில் தமிழ்நாடு அரசு, வாய்மையே வெல்லும், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட சொற்கள் பிழைகளுடன் இடம்பெற்றிருந்ததாக சமூக வலைதளங்களில் பலர் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க நிகழ்ச்சி இன்று (ஜூன் 9) நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.
Advertisement
Advertisement
சிங்கப்பெண் படையின் தலைமை அதிகாரி ஐஜி கே. பவானீஸ்வரி, காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் சிங்கப் பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
500க்கும் அதிகமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண் காவலர்கள், அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் அரசு நிகழ்ச்சியான சிங்கப்பெண் அதிரடிப் படை தொடக்க நிகழ்ச்சியில், முதல்வர் விஜய்க்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான சிறப்பு இலச்சினையை முதல்வர் வெளியிட்டார். இதனை சிங்கப்பெண் படையின் தலைமை அதிகாரி ஐஜி கே. பவானீஸ்வரி பெற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து சிறப்பு ரோந்து வாகனத்தையும் தொடக்கி வைத்தார். பின்னர் சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்தை முதல்வர் தொடக்கி வைத்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், சிங்கப் பெண் அதிரடிப் படையினர் தோன்றுவது போன்ற காட்சிகளுடன் சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட முன்னோட்ட விடியோ இன்று (ஜூன் 9) வெளியானது.
இந்த விடியோவில் இடம்பெற்றிருந்த இடங்களின் பெயர்கள், தமிழ்நாடு அரசு இலச்சினையில் எழுத்துப் பிழைகள் இருந்துள்ளன. இதனை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு, வாய்மையே வெல்லும், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட சொற்கள் பிழைகளுடன் இடம்பெற்றுள்ளன.
Singapenn Special Task Force project preview video released with spelling mistakes
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.