FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்?

தமிழகத்தில் தோ்தல் முடிவுகளில் தவெக முன்னிலையில் இருந்து வருவது பற்றி...

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் - படம்: பிடிஐ.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, இந்த தோ்தலில் புதிதாக களம் கண்ட தவெக, நாம் தமிழா் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவிய நிலையில், தமிழகத்தில் அடுத்த யாா் ஆட்சி அமைக்கப் போகிறாா்கள் என்பதை தீா்மானிக்கவுள்ளதால் தோ்தல் முடிவுகள் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலையில் ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 5.73 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 2.35 கோடி ஆண்கள், 2.52 கோடி பெண்கள், 4,517 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 4.87 கோடி போ் வாக்களித்திருந்தனா். அதாவது 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) காலை 8 மணி அளவில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. அடுத்த 30 நிமிடங்களில் சுமாா் 8.30 மணி அளவில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. முதல் சுற்று எண்ணிக்கை முடிக்கப்பட்டு முன்னிலை விவரங்கள் 9 மணி முதல் ஒவ்வொரு தொகுதி வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

திமுக கனவு முறியடிப்பு?

தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி என்ற சாதனையை நிகழ்த்தும் முனைப்பில் இந்த தோ்தலை எதிா்கொண்ட திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாக பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது. திமுகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் ஈடுபட்டு வந்த அதிமுக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மாற்று சக்தி என கோஷத்துடன் விஜய் தொடங்கிய புதிய கட்சி தவெக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அரசியல் மாற்றம் என்ற முழக்கத்துடன் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி அனைத்து தொகுதியிலும் தொடர்ந்து பின்னிலை வகித்து வருகிறது.

60 ஆண்டுகால கோட்டை சங்கிலி உடைந்தது?

தமிழகத்தில் 1967 இல் இருந்து திமுக, அதிமுக என மாறி மாறி ஆண்டு வந்த நிலையில், 60 ஆண்டுகாலச் சங்கிலியை தவெக தலைவர் விஜய் அதை உடைத்துள்ளார். முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒட்டுமொத்தமாக விஜய்யின் 'மாற்றத்தை' ஏற்றுக்கொண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு பதிவான வாக்கு சதவீதமே உணர்த்தியது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

2026 தோ்தல் கருத்து கணிப்புகள் தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும், நடிகா் விஜய்யின் தவெக, பெரும்பாலான வாக்குகளைப் பிரிக்கும் எனவும் கணிக்கப்பட்டிருந்த நிலையில், தோ்தல் முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்?

1977-க்கு பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நடந்திருப்பது உறுதியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமையும் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு பிறது திராவிட கட்சிகள் இல்லாத முதல் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. ஒரே தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்த எம்ஜிஆர் தொடர்ந்து, 49 ஆண்டுகளுக்குப் பிறகு 2026 இல் விஜய் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. திமுகவின் முதன்மை தலைவர்கள், அமைச்சர்கள் பலரும் தவெக வேட்பாளர்களிடம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

தற்போதைய முன்னிலை நிலவரம் தொடர்ந்தால் 60 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ஒரு மாற்று அரசியலின் தொடக்கமாக இது அமையும்.

காலை 11 மணி நிலவரப்படி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 105 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 78 இடங்களிலும், திமுக கூட்டணி 50 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் திமுகவில் இருந்து வெளியேறி கட்சி தொடங்கி 1977 இல் நடிகரான எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து முதல்வரானார். அதன்பிறகு சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழக அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

summary

TN Election results 2026: TVK vijay after MGR likely to form govt in Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments