முகப்பு
தமிழ்நாடு

விஜய் பதவியேற்பு விழாவுக்கு ராகுலுக்கு அழைப்பு!

விஜய் பதவியேற்பு விழாவுக்கு ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

விஜய் | ராகுல் - கோப்புப் படம்
பகிர்:

தவெக தலைவர் விஜய் நாளை (மே 7) முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 108 இடங்களை கைவசம் வைத்துள்ள தவெகவுக்கு கூடுதலாக 10 முதல் 11 இடங்கள் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து புதிய கூட்டணியை அறிவித்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்தனர்.

Advertisement

தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரின் ஆதரவுக் கடிதத்தையும் விஜய்யிடம் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய். ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்ததும், விஜய் நாளை முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது.

பதவியேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறகிறது.

இதனிடையே, விஜய் நாளை (மே 7) முதல்வராக பதவியேற்கவுள்ள, விழாவுக்கு ராகுல் காந்தி பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் தலைமையோ அல்லது ராகுல் காந்தியிடம் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

summary

As TVK leader Vijay is set to assume office as Chief Minister tomorrow (May 7), an invitation has been extended to Congress leader and Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, to attend the swearing-in ceremony.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.