ஆட்சி அமைக்க திமுகவுடன் அதிமுக பேச்சா? விஜய்க்கு பெரும்பான்மை கிட்டுமா?
தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக திமுக உடன் அதிமுக பேசி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக திமுக உடன் அதிமுக பேசி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடில் ஆட்சி அமைக்க 118 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. (இரண்டு தொகுதிகளில் வென்றுள்ள விஜய், ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்வார்)
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளதால், தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 (107+5) ஆக உயர்ந்துள்ளது. எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவைப்படுகிறது.
Advertisement
Advertisement
ஆளுநர் இரண்டு நாள்களில் ஆதரவை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பதாக இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, விஜய்யால் பெரும்பான்மை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அரசமைப்பது தொடர்பாக திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேச்சு நடத்தி வருவதாக இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Talks between AIADMK and DMK to form the government Will TVK Vijay secure a majority
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.