மு.க. ஸ்டாலின், இபிஎஸ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் விஜய்!
மு.க. ஸ்டாலின், இபிஎஸ் உள்ளிட்டோருக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துள்ளது பற்றி...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் வாழ்த்துகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரையும் சந்தித்துப் வாழ்த்துகளைப் பெற்றார்.
மேலும் முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார், மேற்குவங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி, அசோக் கெலாட், தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோருக்கு விஜய் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
Chief Minister Vijay expresses gratitude to M.K. Stalin, EPS and others
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.